இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
நடிந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் ரணில் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.