நவகிரகங்களின் முழு சுபர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
ஒருவருக்கு சிறந்த கல்வி, நல்லெண்ணம், சிந்தனை, பொன், பொருள், குழந்தை பாக்கியம் தரக்கூடியவர் குரு பகவான்.
இவர் தற்போது ரிஷபத்தில் சஞ்சரித்து வரக்கூடிய நிலையில், அக்டோபர் 9ஆம் திகதி புதன்கிழமை காலை 10:01 மணிக்கு ரிஷபம் ராசியிலேயே பின்னோக்கி நகரும் வக்ர நிலையில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.
இவர் 2025 பெப்ரவரி 05ஆம் திகதி வரை வக்ர நிலையில் நீடிக்கிறார். குருவின் இந்த அமைப்பால் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அபரிமிதமான அதிர்ஷமும், வெற்றிகளும் குவியும்.
அந்த வகையில் எந்த ராசிகளுக்கு என்னென்ன பலன் என நாம் இங்கு பார்ப்போம்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு தற்போது விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற விரய செலவுகள் ஏற்படும். பெரியளவில் சாதகமற்ற சூழல் உள்ளது. இந்நிலையில் குருவின் வக்ர பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகப் போகிறது. உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டங்கள் செயல்படுத்தவும், அதில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. பிறரிடம் சிக்கியுள்ள உங்கள் பணம் திரும்ப கிடைக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். எந்த முடிவை எடுத்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சாதக சூழல் இருக்கும். எந்த விஷயத்திலும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் உங்கள் வேலை, வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டால் உங்களுக்கான பொன்னான வாய்ப்புகளும், லாபமும் தேடிவரும்.
கடக ராசி
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டம் பக்க பலமாக இருக்கும். உங்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும். நிதி முன்னேற்றத்தால் லாபகரமான சூழல் இருக்கும். வேலை, வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். முன்னேற்றத்திற்கான திட்டங்கள், முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் குரு பின்வாங்குவதால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தில் விரும்பிய பலன்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன மற்றும் அவர்களின் சிக்கிய பணம் அனைத்தும் இப்போது கிடைக்கும். இதன் மூலம் கன்னி ராசி நேயர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். இந்த காலகட்டத்தில் அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தாங்கள் சிக்கலை எதிர்கொள்ளும் தொடர்புடைய பாடங்களில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிலையால் உங்களுக்கு உலக இன்பங்கள், சுக போக பொருட்கள் சேரும். தொழிலில் மகத்தான வெற்றியை பெறலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பு, ஆதரவு பெறலாம். வணிகத்தை விரிவுபடுத்த வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்ட காரியங்களால் பெரிய லாபம் ஈட்ட வாய்ப்புகள் உண்டு. உங்கள் செயலில் புத்திசாலித்தனமும், புதிய சிந்தனையும் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். நல்ல வருமானம் இருந்தாலும், செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.
தனுசு ராசி
தனுசு ராசி அதிபதியான குருவின் வக்ர நிலையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகஸ்தர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரிய லாபகரமான சூழல் உண்டு. வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்திலும், பணியிடத்திலும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.