இரண்டு வருடங்களின் பின் இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (27) நள்ளிரவு முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது.
இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை (28) அதிகாலை ஒரு மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பாத்ததும்பர, அக்குறனை, ரஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம மற்றும் ஹந்தானை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மகாவலி கங்கைக்கு விடுவிக்கப்படவுள்ளமையினால், குறித்த ஆற்றில் மீன்பிடிப்பதனையும் ஆற்றினுள் இறங்குவதையும் தவிர்க்குமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.