வானில் இன்றையதினம் (29-09-2024) முதல் இரண்டு நிலவுகளை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றளர்.
மினி நிலவு (2024 பிடி5-ஐ) என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது.
இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும்.
எனினும், இந்த மினி நிலவு, நிலவைவிட 173, 700 மடங்கு சிறியது என்பதால் நிலவு போல் ஜொலிக்காது.
நிலாவை வெறும் கண்ணால் பார்க்கலாம். ஆனால் மினி நிலவை தொலைநோக்கி மூலம் மட்டுமே காணலாம்.
எனவே தொலைநோக்கி மூலம் வானை பார்த்தால் ஒரு பெரிய நிலவும், ஒரு சிறிய நிலவும் அழகாக தெரியும்.
இந்த இரண்டாவது நிலவை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரை கண்டுகளிக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.