வயிறு தொடர்பான எந்தவித சிக்கல்கள் வந்தாலும் அதனை சரிச் செய்வதற்கு அனைவரும் பரிந்துரைப்பது இளநீர் தான்.
ஆனால் காலங்கள் மாற மாற இளநீர் அதன் சுவைக்காகவும், அதிலுள்ள ஊட்டச்சத்துக்களாகவும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆரோக்கியத்தை வாரி வழங்கும் ஆற்றல் இளநீருக்கு உள்ளது. இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் சிலருக்கு இளநீர் குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இளநீர் குடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் இளநீர் குடிக்கக் கூடாது?
1. இளநீரில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் சிறுநீரக பிரச்சினையுள்ளவர்கள் குடிக்கக் கூடாது. ஏனெனின் இவர்கள் சில மருந்துகள் (ACE தடுப்பான்கள் போன்றவை) எடுத்து கொள்வார்கள்.இதனால் அவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கலாம். மீறி குடிப்பவர்களுக்கு சீரற்ற இதயத் துடிப்பு உட்பட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
2. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை சர்க்கரை பானங்களை விட கலோரிகள் இளநீரில் குறைவாக உள்ளது. இது குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலுக்குள் ஏற்றப்படும் பொழுது எடையை குறைவதற்கு பதிலாக எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
3. இளநீரில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இது நீரிழிவு அல்லது இரத்த சர்க்கரை மேலாண்மை பிரச்சினையுள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இரத்த குளுக்கோஸ் அளவில் குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
4.சிலருக்கு இளநீர் குடிப்பதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தோல் எதிர்வினைகள், இரைப்பை குடல் பிரச்சினை அல்லது சுவாச பிரச்சினைகள் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் இளநீரை தவிர்ப்பது சிறந்தது.
5. வயிறு வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான கோளாறு உள்ளவர்கள் பெரும்பாலும் இளநீர் குடிப்பார்கள். இது சில சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தும். இளநீரிலுள்ள நார்ச்சத்து அல்லது இயற்கை சர்க்கரைகள் கூட காரணமாக இருக்கலாம்.