நாட்டின் பிரபல நிறுவன குழுமங்களில் ஒன்றான Hayleys Plc இன் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹேலிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மோஹான் பண்டிதகே இது குறித்து கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேராவின் இந்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்காக ஹேலிஸ் குழுமத்தின் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினராக முன்னர் பணியாற்றிய தம்மிக்க பெரேரா, 2022 ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி முதல் குறித்த பதவிகளில் இருந்து விலகினார்.
Hayleys PLC என்பது இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களின் குழுமமாகும் மற்றும் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அதன் கட்டுப்பாட்டு பங்குதாரராக உள்ளார்.
Hayleys PLC யின் பங்கு மூலதனத்தில் 51.01% உரிமை தம்மிக்க பெரேராவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.