எனது வாழ்நாளில் மக்களிடமிருந்து ஒரு ரூபா கூட வாங்கியது இல்லை என முன்னாள் கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு என்னிடம் 8 வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டன. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆன பின்பு இந்த குறிப்பிட்ட வாகனமே எனக்கு வழங்கப்பட்டது.
கூடிய காலம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் இதனை நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் வேறொரு வாகனம் வழங்கப்படும் வரை இதனை பாவிக்க கூறினார்கள்.
இங்கு குறிப்பிட்டு சொல்லும் வாகனம் மிகவும் பழுதடைந்த வாகனம், முன் கதவுகளில் இருந்து தண்ணீர் கசிந்த நிலையிலேயே நான் பாவித்தேன்.
எரிபொருள் செலவு மிக மிக அதிகம். வாகனம் ஒன்று கிடைக்கும் வரையில் இந்த வாகனத்தை வைத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டது.
இது என் பெயரில் வாங்கிய கார் அல்ல, அரசாங்கம் கொடுத்த வாகனம், இந்த வாகனங்களை மட்டும் குறிவைத்து என்மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
நான் செய்த வேலைகள் கொழும்பு மக்களுக்குத் தெரியும் ஊடகங்கள் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசியதுடன், நான் அல்ல, இந்த வாகனத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறியுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தகவலறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றியும் மக்கள் அறிந்து கொள்ளலாம். நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து 5 காசுகளை கூட வாங்கியது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.