பொதுவாக இந்திய சமையலறை அனைத்திலும் முக்கிய பொருளாக பூண்டு இருக்கும்.
இதன் தனித்துவமான சுவை, உணவின் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் பூண்டில் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் தீர்க்க முடியாத நோய்கள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெங்காயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்பது பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் பூண்டு இருக்கும் ஊட்டசத்துக்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் என பலரும் அறியாத தகவலாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து வழங்கும் பூண்டு எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பூண்டு எண்ணெய் + தலைமுடி வளர்ச்சி
1. பூண்டில் சில சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. பூண்டு எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் தலையில் இருக்கும் பொடுகு, தலையில் அரிப்பு, தொற்று போன்ற பிரச்சினைகள் குணமடையும். ஏனெனின் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் திறன் பூண்டிற்கு உள்ளது.
2. பூண்டில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். சிலருக்கு பருவமழை மற்றும் ஈரப்பதமான காலநிலை இருக்கும் பொழுது தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இவற்றிற்கு பூண்டு எண்ணெய் தீர்வு உள்ளது.
3. அதிகமாக வியர்க்கும் பொழுது உச்சந்தலையில் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் பூண்டு எண்ணெய் பயன்படுத்தலாம்.