வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















