களுத்துறை – பாணந்துறை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளான 7 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 12 மற்றும் 13 வயதுடைய மாணவிகளே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் உள்ள மாணவிகளில் நிலை கவலைக்கிடமாக இல்லையெனவும், அவர்களின் முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.