தற்போது இருக்கும் தவறான பழக்கங்கள் காரணமாக வயிற்றில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
உதாரணமாக, வயிற்றில் அசௌகரியம், மலச்சிக்கல் மற்றும் கடுமையான வயிற்று வலி போன்றவற்றை கூறலாம்.
இது போன்று வயிற்றில் கோளாறு ஏற்படும் போது, வயிற்றுப்போக்கு மட்டுமல்ல, வாந்தி, குமட்டல், வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும். ஒரு தடவை இப்படி வயிற்றுக் கோளாறுகள் வந்து விட்டால் அது அடுத்து வரும் இரண்டு நாட்களில் தானாகவே சரியாகி விடும்.
அந்த சமயத்தில் இலகுவில் செரிமானத்திற்குள்ளாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இதனை தவறு பட்சத்தில் ஆரோக்கிய குறைபாடுகள் கண்டிப்பாக ஏற்படலாம்.
அந்த வகையில், வயிற்றில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வயிற்றுக் கோளாறுகளை தூண்டி விடும் உணவுகள்
1. வயிற்றுக் கோளாறு ஏற்படும் போது ஆசிட்டை உற்பத்திச் செய்யும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2. வாயு மற்றும் அசிடிட்டி துண்டும் துரித உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளை உணவில் சேர்த்து கொள்வதை கட்டுப்பாட்டில் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
3. வயிற்றுக் கோளாறு ஏற்படும் போது சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். அந்த சமயத்தில் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் உடலில் ஒரு வகையான சோர்வை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை திரவ உணவுகளை சரி எடுத்து கொள்ளலாம்.
4. வயிற்றில் கோளாறுகள் இருப்பது போன்று அறிகுறிகள் லேசாக இருந்தால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய, காரமற்ற மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறுகிய நேர இடைவெளியில் உண்ணலாம். இதனால் உங்களின் பழைய ஆரோக்கியத்தை மீட்டு தர முடியும்.