கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக அம்மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்ப கட்டணமாக 200 ரூபாவாகவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவாக பெறப்பட்ட நிலையில் புதிய அரசின் பெற்றோல் விலை குறைப்பால் ஆரம்ப கட்டணமாக 150 ரூபாவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவும் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு 5 ரூபாவாகவும் அறவிடுவதாக தீர்மானாத்துள்ளதாக தெரிவித்தனர்.கொழும்பில் ஆரம்ப கட்டணம் 100 ரூபாவாக இருந்தாலும், கிளிநொச்சி வீதிகள் சீர் இன்மையால் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம்.
எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டமும் அபிவிருத்தி அடையும் நிலையில் கொழும்புக்கு சீராக கட்டணத்தை கொண்டுவர முடியும் என தெரிவித்தனர்.



















