சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சீ ஷெல்ஸ் அரச சபையில் நேற்று (16) வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சீ ஷெல்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) , கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.
அதோடு ( Vincent Perera) மேலதிகமாக பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) , சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.