இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயாராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை காசாவிலும் லெபனானிலும் தனது சகாக்கள் அழிக்கப்பட்டதை பார்த்துள்ளதால் யுத்தமொன்றை தவிர்ப்பதற்கு முயல்கின்றது.
இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்வதற்காக பல இராணுவதிட்டங்களை வகுக்குமாறு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கொமேனி பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் நான்கு அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலின் அளவை பொறுத்தே ஈரானின் பதில் தாக்குதல் காணப்படும் . இந்த மாதம் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களிற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதனால் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டால் ஈரான் பதிலடி கொடுக்கும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாறாக இஸ்ரேல் ஈரானின் ஆயுதகளஞ்சியங்கள் மற்றும் தளங்கள் மீது சிறிய ஆளில்லா விமானமாக்குதல்கள் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டால் ஈரான் பதில் நடவடிக்கையில் ஈடுபடாது.
எனினும் மத்திய கிழக்கிற்கும் பிராந்திய நாடுகளிற்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படலாம்,ஈரானிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான முழுமையான யுத்தம் என்பது மேலும் குழப்பநிலையை காசா லெபனானில் யுத்தநிறுத்த்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும்