நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், சர்வதேச புலனாய்வு பிரிவுகள், அமைப்புக்கள் என்பனவற்றுடனும் முப்படையினர் மற்றும் பொலிஸாருடனும் இணைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.