நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு அலுவலகங்கள், தூதரகங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் ஜனாதிபதி கலந்துரையாட வேண்டும்.
அதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது.
நாட்டின் புலனாய்வுத் துறை, பொலிஸார் மற்றும் இராணுவத்தை பலப்படுத்தினால் இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.