“நான் தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு அனுர என்னிடம் கூறியுள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன், மக்களிடம் ஆதரவைக் கேட்டேன், ஆனால் பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன்.
இருப்பினும், அவருக்கு பெரும்பான்மை இல்லை, 51% மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. எனவே, நம்மை வேறுபடுத்துவது எது? நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி, அவர் பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதி. அவரைப் போலவே எனக்கும் பெரும்பான்மை இல்லை.
எனவே, பெரிய வித்தியாசம் என்ன? நாங்கள் இருவரும் ஒரே நிலையில் இருக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பெரும்பான்மை இல்லாதது குறித்து விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதுடன், அதனை அவர் பதவியில் இருந்த போது அவரது பதவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.
“பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி நான்.
புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அனுரா பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதியாகும் என்று கூறினார்