தமிழகத்தில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் (Chennai) 270 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்படுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து, 150,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 2.7 கிலோ மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும், மணிப்பூரின் ஒருவரும் அடங்குகின்றனர்.
இதில் விஜயகுமார் என்பவரே கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.