கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த லொஹான் ரத்வத்தேவுக்கு லொஹான் ரத்வத்தேவுக்கு நேற்றிரவு (02-11-2024) ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் சிகிச்சை முடிந்த பின்னர் பொது வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்தே, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறு நீதவான் பரிந்துரைத்ததன் காரணமாக லொஹான் ரத்வத்தேவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.