நாட்டில் சில பகுதியில் சமீப நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர்,
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ்.கோப்பாய் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் மின்னல் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.