யாழ்ப்பாணம்(Jaffna) – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (12.11.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.