வீடொன்றில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், விஜேபுர பிரதேசத்தில் உள்ள இந்த கொலை சம்பவம் இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
தனது நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டில் நேற்று (11) இரவு கொலை செய்யப்பட்டவர் களியாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்போது, நண்பர்கள் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.