கொழும்பு தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் ச சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது .
தெஹிவளை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையில் சிவப்பு சாயம் கலந்த கொள்கலனை அகற்றுமாறு சந்தேகநபரிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சம்பந்தப்பட்ட கொள்கலனை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துள்ளார். அதன் பின்னர் சந்தேகநபர் அதனை கால்வாயில் விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது. அது தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்தார்.