இலங்கை தமிழ் அரசு கட்சியின் வெற்றிடமாக உள்ள சட்ட இடைவெளியை நிரப்ப அந்த தேசியப்பட்டியல் சுமந்திரனுக்குதான் வழங்கப்பட வேண்டும் எனவும் பலரும் கூறிவருகின்றனர்.
தேசிய பட்டியலை பெறுவதற்கு உரிய கணிசமான வாக்குகளை இம்முறை மட்டக்களப்பு மாவட்டமே பெற்றுள்ளது. எனவே அந்த தேசிய பட்டியலை மட்டக்களப்புக்கு வழங்குவதே முறையாகும் .
சுமந்திரன் எதிர்பார்ப்பு
இம்முறை பாராளுமன்றம் தெளிவாகியுள்ள ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆண்களாக உள்ள நிலையில், தேசியபட்டியல் தெரிவை பெண்ணுக்கு வழங்குவதே சிறந்தது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அந்தவகையில் எண்ணிக்கை அடிப்படையில் மட்டக்களப்பிற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாலும் , யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருப்பதாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிடாத ஒரு ஆளுமையுள்ள பெண்ணிற்கு வழங்குவதும் சிறப்பாக இருக்கும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேசியபட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என கூறிய சுமந்திரன் , கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்பட்டவன் என மறைமுகமாக தனது எதிர்பார்ப்பை கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.