நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டு நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வீட்டுச்சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கிய சுமந்திரன், மருத்துவர் அருச்சுனாவின் சுயேட்சை கட்சி ஊடாக களமிறங்கிய வேட்பாளர் கௌசல்யா பெற்ற வாக்க்குகளை கூட அவரால் பெறமுடியவில்லை.
கௌசல்யா 15789 – சுமந்திரன் 15039
அதன்படி கௌசல்யா பெற்ற வாக்குகள் 15789 , அதேவேளை சுமந்திரன் பெற்ற வாக்குகள் 15039 ஆகும்.
இந்நிலையில் மக்களுக்கு அறிமுகமில்லாத கௌசல்யாவை வாக்களித்து நாடாளுமன்றம் செல்ல வைத்த மக்கள், சுமந்திரனை ஒதுக்கியுள்ளமை மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நிரூபித்துள்ளனர்.