கனடாவில் பேக்கரி ஒன்றில் அண்மையில் உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனமொன்றின் பேக்கரி ஓவனில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
எனினும், இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமானது கிடையாது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
19 வயதான குர்சிம்ரன் காவுர் என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். மரணத்தில் சந்தேகம் கிடையாது என ஹாலிபெக்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.