நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயரை தன்னிச்சையாக சேர்த்ததாக கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன் காரணமாக அங்கு கலவரங்கள் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளதை அடுத்து, ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.