உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்
அந்தவகையில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிர்வாக சேவையில் அதி உயர் பதவிகளை வகித்த ஏ.விமலேந்திரராஜா யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் படித்தவர் ஆவார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் குறிப்பாக ஊழலுக்கு எதிரான குரலாக விளங்கிய வசந்தவின் தலைமையிலான அமைச்சிற்கு தமிழரான ஏ.விமலேந்திரராஜா உள்வாங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.