மாத்தறை பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் பஸ்ஸின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பஸ் சாரதி அளுத்கம பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சாரதி பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது மற்றுமொரு பஸ் சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அளுத்கம பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வெளியே இறங்கிய போது முச்சக்கரவண்டியில் சென்ற குழுவொன்று பஸ் மற்றும் பஸ்ஸின் சாரதி மீது தாக்குதல் நடத்தி சாரதியின் கையடக்கத் தொலைபேசியையும் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.