யாழ். குடாநாட்டில் பெய்துவரும் அடைமழையால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் யாழிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி திருநெல்வேலிச் சந்தையில் நேற்றையதினம் பதிவான மரக்கறிகளின் விலைகள் ,
கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாவற்காய் கிலோ 400 ரூபாவாகவும், தக்காளிப் பழம் கிலோ 350 ரூபாவாக உள்ளது.
மேலும் , மரவள்ளிக்கிழங்கு கிலோ 250 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 150 ரூபாவாகவும், முருங்கைக்காய் கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.