சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் வருடத்தின் விவசாய அறுவடைக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 4வது வியாழன் அன்று அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் [Thanks நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நேற்றையதினம் (28-11-2024) தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் காணொளி வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
அந்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
“We have much to be thankful for.”
From the @Space_Station, our crew of @NASA_Astronauts share their #Thanksgiving greetings—and show off the menu for their holiday meal. pic.twitter.com/j8YUVy6Lzf
— NASA (@NASA) November 27, 2024
தாங்க்ஸ் கிவ்விங் விருந்தில் சுனிதா மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள், வான்கோழி கறி [smoked கிரான்பெர்ரி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர், காலான்கள் உணவாக வழங்கப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் 2025 பெப்ரவரி மாதம் பூமி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.