பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சிறைச்சாலை வைத்தியசாலை வளாகம் மற்றும் சிறைச்சாலை வளாகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் 05, டேட்டா கேபிள்கள் 08 மற்றும் லைட்டர்கள் 02 உள்ளிட்ட பொருட்களே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.