இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறைவடைந்த தங்க விலையானது பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் இன்று (11) மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (11.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 786,523 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
மேலும், 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 221,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,290 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 194,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க நிலவரம்
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.