நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரசாங்க தோட்டங்களில் இருந்து நாளாந்தம் ஒன்றரை இலட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நேற்றையதினம் 80,000 தேங்காய்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தேங்காய் சந்தை ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும் தான் காரணம் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளரும், மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான புபுது ஜயகொட (Pubudu Jayagoda) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேங்காய் ஏற்றுமதி 800 மில்லியனில் இருந்து 1,400 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.