யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார்.
இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகிறது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
யாழ்.பருத்தித்துறையில் உள்ள கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த 33 வயதான சுரேஷ்குமார் ரஞ்சிதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
தொடர்ச்சியான காய்ச்சலால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09-12-2024) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு அவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் (10-12-2024) முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.