இரத்தினபுரி , கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் தந்தையால் வெட்டப்பட்ட பலா மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்து மகன் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி , கொடவல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மகன் தனது தந்தை மற்றும் நபரொருவருடன் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தந்தையும் நபரும் இணைந்து பலா மரத்தை வெட்டிக்கொண்டிருந்த போது மரத்தின் கிளை ஒன்று மகனின் தலையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.