55,000 மெட்ரிக் தொன் பூந்தி உரம் மானியத்தை நெல் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு விரைவில் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
குறித்த கையிருப்பானது, உலக உணவுத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு இன்று மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் என்ற இந்த பூந்தி உரமானது, ரஷ்ய அரசு நிறுவனமான யூரல்கெமின் தயாரிப்பாகும்.
இதன்படி, மானியமாக வழங்கப்பட்ட உர கையிருப்பில் 50 வீதத்தை நெற்செய்கைக்கும், எஞ்சிய 50 வீதத்தை தென்னைச் செய்கைக்கும் பயன்படுத்துவதற்கு கடந்த 9ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
ஒரு பருவத்தில் நெல் பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படும் மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தின் அளவு 25,000 மெட்ரிக் தொன்னாக இருப்பதால், அப்பருவத்தில் நெல்பயிர் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கப்படவுள்ளதுடன், மீதமுள்ளவை தென்னைச் செய்கைக்கு பயன்படுத்தப்படும்.