கந்தானை வீதி மாவத்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் காரரான கந்தானை கொன்ட ரஞ்சி என அழைக்கப்படும் திசாநாயக்க முதியன்சேலாகே ரஞ்சித் குமார என்பவரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் , துப்பாக்கியை வைத்திருத்தல் மற்றும் மாடுகளைத் திருடுதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் துபாய் நாட்டுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.