இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,942,989 ஆகும்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
இதன்படி, செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதம் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 6,653ஆல் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டது.
அதன்படி, நாட்டின் அடுத்த 10 மாத காலப்பகுதிகளில் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 25,904 ஆல் அதிகரித்துள்ளது.