யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்படுகின்றார்.
குறித்த இளைஞன் தனது வீட்டு வளவிலேயே, இருந்த நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது