நாட்டுக்கு வரும் ஆய்வு கப்பல்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு கப்பகள் நாட்டு எல்லைக்குள் வரும்போது அவை விசேட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நடைமுறைகளுக்கான தேசிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கான விசேட தேசிய கொள்கைகளை தயாரிக்க விசேட குழுவோன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் அந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் அந்த குழு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.