இலங்கைக்குள்(Sri lanka) நுழைந்த “டெர்மினேட்டர்” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு இஸ்ரேலிய சிப்பாய், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்றினால்,அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிந்த் ரஜப் அறக்கட்டளையானது, கால் ஃபெரன்புக்(Gal Ferenbook) என்ற குறித்த இராணுவ சிப்பாயின் புகைப் படத்தை வெளியிட்டு, காசாவில் ஒரு குடிமகனைக் கொன்றதற்காக, அவரைக் கைது செய்யக் கோரி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் மேல்முறையீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக செனல் 12 தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பது தொடர்பில் செனல் 12 கேள்வி எழுப்பியுள்ளது.