சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது தவணை மீளாய்வு முடிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாவில் இருந்து 150,000 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்படி, 150,000 ரூபா மாதாந்த சம்பளம் பெற்ற ஒருவர் சம்பாதிக்கும் போது 100% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
150,000 ரூபா சம்பளம் பெறும் நபர் ஒருவர் வருமானம் ஈட்டும் போது 3,500 ரூபாவை வரியாக செலுத்தியிருந்ததோடு புதிய திருத்தத்தின் பிரகாரம் சம்பாதிப்பதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
200,000 ரூபா சம்பளம் பெறும் நபர் ஒருவர் வருமானம் ஈட்டும் போது 10,500 ரூபாவை வரியாக செலுத்தியிருந்த நிலையில், புதிய திருத்தத்தின்படி 3,000 ரூபா செலுத்த வேண்டும்.
300,000 ரூபா சம்பளம் பெற்ற ஒருவர் 35,000 ரூபாவை சம்பாதித்த போது வரியாக செலுத்தியிருந்த நிலையில் புதிய திருத்தத்தின் பிரகாரம் செலுத்த வேண்டிய தொகை 18,500 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
மேலும், 500,000 ரூபா சம்பளம் பெற்ற ஒருவர் சம்பாதித்த போது 106,500 ரூபாவை வரியாக செலுத்தியிருந்த நிலையில், புதிய திருத்தத்தின் மூலம் 86,000 ரூபாவே செலுத்தப்பட உள்ளது.