இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தில் இதுவரை 193,471 முதல் 229,644 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
குறிப்பாக டிசம்பர் முதல் பாதியில், 21,174 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவில் இருந்து 13,762 சுற்றுலா பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 7,417 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 6,574 சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 385,267 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 180,414 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 166,999 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், பல மாதங்களாக தொடரும் விசா பிரச்சினைகள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக இருந்ததுடன், இது இந்த இலக்குகளை அடைவதை ஓரளவு பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.