2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைகள் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் மின்சார எடுக்கப்பட்டதாகவும் மின்சார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி மின்சாரம் எடுப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை கூறுகிறது.