அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் இன்று (23.12.2024 கல்வியமைச்சினால் (Ministry of Education) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 02ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் நிறைவடையும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.