பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீட்டிக்கப்படும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் ஆயுதப்படைப் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துப்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படை பாதுகாப்பு அம்சங்களும் உத்தியோகபூர்வமாக நீக்கப்படுகின்றன.
இன்றிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும், அவர்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்படும் வகையில் தேவையான அளவிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட்டு, அவசியமேற்படின் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
முப்படையினர் திரும்பப் பெறப்பட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.