போலாந்து பிரஜை ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுழியோடிப் படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹூங்கல்ல கடற்கரையில் நேற்று (24) நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை எதிர்பாராத விதமாக கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட உயிர் பாதுகாப்பு சுழியோடிப் பிரிவினர் கடலில் மூழ்கிய நபரை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்ததோடு மேலதிக சிகிக்சைகளுக்காக அவர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்திருந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது,