ஹிக்கடுவை, நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர் பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் ரஷ்ய மற்றும் கொலம்பிய பிரஜைகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவினர் இன்று கடலில் (27) நீராடியபோது கடலலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உடனடியாக தலையிட்டு குழுவினரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதன்போது மீட்கப்பட்டவர்கள் 12, 09 மற்றும் 04 வயதுடைய குழந்தைகளும் அடங்குவர் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.