இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வைத்தியசாலைகளில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போது, வைத்தியசாலைகளில் எம்.ஆர்.ஐ பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்ளும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.
இது வெறுமனே கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பிரச்சினை அல்ல என்றும், இந்த விடயம் தொடர்பில், ஏலவே சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ளாதிருக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாகக் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.